வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

வியாழன், 15 மே 2008 (15:28 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியின் தென்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வலுவடையும் சூழல் உள்ளது.

மழை பற்றி ஆய்வு நடத்தி வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ், நமது தமிழ்.வெப்துனியா.காம்-ற்கு கணித்து அனுப்பியுள்ளார்.

அதன்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கடல் சீற்றமும் காணப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்