மத்திய அரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி திட்டம் ஜூன் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்படும் என்று நபார்டு வங்கி தலைவரும் மேலாண்மை இயக்குநருமான யூ.சி. சாராங்கி தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சென்ற பிப்ரவரி 29 ந் தேதி மக்களவையில் சமர்ப்பித்த பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும என்று அறிவித்தார்.
இது குறித்து நபார்டு என்று அழைக்கப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூ.சி. சாரங்கி கூறுகையில், இந்த வருடம் கடன் தள்ளுபடி செய்ய நிச்சயிக்கப்பட்ட ஜூன் மாதத்தில் கடன் தள்ளுபடி செய்யப்படும் இதற்கு தேவையான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நபார்டு வங்கி, கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த வருடம் புதிதாக 30 லட்சம் விவசாயிகள் கடன் அட்டை ( கிசான் கிரடிட் கார்ட்) வழங்கப்பட்டுள்ளன. இது வரை மொத்தம் ஏழு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கும் அதிகமானவைகள் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளன.
2007-08 நிதி ஆண்டில் நபார்டு வங்கியின் விற்று முதல் ரூ.98,500 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய வருடத்தைவிட 21 விழுக்காடு அதிகம் என்று தெரிவித்தார்.