மத்திய அரசு பட்ஜெட்டில் தள்ளுபடி செய்துள்ள விவசாய கடனில் விவசாய நகைக்கடன் உள்ளதா இல்லையா என குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனர்.
மத்திய அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ஐந்து ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளின் அனைத்து பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் பெரும் விவசாயிகள் தங்கள் நிலுவை தொகையில் 75 சதவீத தொகையை ஒரே தவனையில் கட்டினால் மீதமுள்ள 25 சதவீத கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் தங்க நகைகளின் பேரில் விவசாய பணிக்கு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். இந்த கடன்களும் தள்ளுபடி செய்யப்படுகிதா இல்லை என விடைதெரியாமல் விவசாயிகள் குழப்பமான நிலையில் உள்ளனர்.
இது குறித்து சரியான விளக்கம் இதுவரை வரவில்லை. அரசு அறிவித்ததுபோலவே 2007 மார்ச் மாதத்திற்குள் கடன் வாங்கி இதுவரை செலுத்தாமல் உள்ள விவசாய நகை கடன்களையும் முழுமையாக வட்டியுடன் தள்ளுபடி செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியாக வேண்டும் எனவும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் கூறுகின்றனர்.