மேட்டூர் அணை மூடப்பட்டது!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (14:11 IST)
கா‌விரி பாசன பகுதிகளில் நெற்பயிர் விளைச்சல் முடிந்து, அறுவடை செய்ய தயாராக உள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லை என்பதால் மேட்டூர் அணை நேற்று மாலை மூடப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து கா‌விரி பாசன பகுதிகளுக்கு கட‌ந்த ஜூன் 17ஆ‌ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து 225 நாட்கள் தண்ணீர் திறந்து விட்ட பின், நேற்று மாலை மூடப்பட்டது.

கா‌விரி பாசன பகுதிகளில் நெற்பயிர் விளைச்சல் முடிந்து, அறுவடை செய்ய தயாராக உள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லை என்பதால் மூடப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழில் நுட்ப காரணங்களுக்காக சிறு அளவு தண்ணீர் வெளியேற்றப்படும். நேற்று மாலை நீர் மட்டம் 94.67 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி. அணைக்கு விநாடிக்கு 422 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

இந்த ஆ‌ண்டு ம‌ட்டு‌ம் மேட்டூர் அணை 7 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்