தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சி: வீரபாண்டி ஆறுமுகம்!

வியாழன், 10 ஜனவரி 2008 (18:11 IST)
இர‌ண்டா‌ம் பசுமை புர‌ட்‌சியை நோ‌க்‌கி த‌மிழக‌த்தி‌ல் வே‌ளா‌ண்மை துறை மறு ‌சீரமை‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்று வேளா‌ண்மை‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌‌‌றி‌ப்‌பி‌ல், தமிழக அரசின் வேளாண்மைத் துறையின் கீ‌ழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனைத் துறை, விதைச்சான்றுத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, மண் பரிசோதனை நிலையங்கள், வேளாண்மைப் பல்கலைக் கழகம் போன்ற பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அதன் தலைவர்களாக இயக்குநர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

அவருக்கு கீ‌ழ் கூடுதல் வேளாண்மை இயக்குநர், இணை வேளாண்மை இயக்குநர், துணை வேளாண்மை இயக்குநர், உதவி வேளாண்மை இயக்குநர், வேளாண்மை அலுவலர் போன்ற பதவிகள் உருவாக்கப்பட்டு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைகள் வட்டங்களில் பல இடங்களில் செயல்பட்டு வருவதால் விவசாயிகள் பல இடங்களுக்கு சென்று அந்தந்த துறையின் தொழில் நுட்பங்களை பெற வேண்டிய சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்பட்டு அரசின் திட்டங்கள் வேளாண்மை தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு விரைவில் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 2007-08 ஆம் ஆண்டின் வேளாண்மை மானிய கோரிக்கையில், விவசாயிகளின் நன்மையை கருத்தில் கொண்டு தமி‌ழ்நாடு வேளாண்மைத் துறை மறுசீரமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி வேளாண்மை இயக்குநர் தலைமை அலுவலகங்களில் உள்ள தேவையற்ற பதவிகள் மாவட்ட அளவிற்கும் வட்டார அளவிற்கும் மாற்றம் செ‌ய்யப்பட்டு இரண்டு நிலை பதவிகள் மட்டுமே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு கோப்புகள், திட்டங்கள் விரைவாக செயல்பட தலைமையிடங்களில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதேபோல மாவட்ட அளவில் மூன்று அடுக்காக இருந்த வேளாண்மைத் துறை இரண்டு அடுக்காக மாற்றப்பட்டு, மாவட்டம் மற்றும் வட்டார அளவில் துறைகள் செயல்பட பதவிகள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்திட வழிவகை செ‌ய்யும் வகையில் வேளாண்மைத் துறை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு செ‌ய்வதால் எந்த ஒரு பதவியும் இழப்பு இல்லாமல் அனைத்து பதவி இடங்களும் தக்க வைத்துக் கொண்டு
நம்முடைய அனைத்து துறைகளுக்கும் சமமாக பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறை மறுசீரமைக்கப்படுவதால் பல ஆண்டுகளாக பதவி உயர்வு பெறமுடியாமல் இருந்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கு விதிகளை தளர்த்தி 1,899 பேர்களுக்கு துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு வேளாண்மை உதவி இயக்குநர், இரண்டு வேளாண்மை அலுவலர்கள் 6 உதவி வேளாண்மை அலுவலர்களும் தோட்டக்கலை துறையில் ஒரு தோட்டக்கலை உதவி இயக்குநர், ஒரு தோட்டக்கலை அலுவலர், 4 உதவி தோட்டக்கலை அலுவலர்களும், வேளாண்மை விற்பனைத் துறையில் ஒரு வேளாண்மை அலுவலரும் விதைச் சான்றுத் துறையில் ஒரு வேளாண்மை அலுவலரும் மண் பரிசோதனை செ‌ய்ய ஒரு வேளாண்மை அலுவலரும் வேளாண்மை பொறியியல் துறையில் ஒரு உதவி செயற்பொறியாளரும் வட்டார அளவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் செயல்படுவார்கள்.

இதனால் விவசாயிகள் தங்களுக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பங்களையும் ஒரே இடத்தில் வட்டார அளவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெறும் வா‌ய்ப்பை பெறுகிறார்கள். வேளாண்மைத் துறையை சார்ந்தவர்கள் அந்த வட்டாரத்தில் உள்ள சாகுபடி பரப்பளவை கொண்டு அதில் பாசனப்பகுதி மற்றும் இறவை பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியின் முக்கிய பயிர்களுக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பங்களை வழங்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

தோட்டக் கலைத் துறை அலுவலர்கள் அந்த பகுதியில் உள்ள தோட்டக்கலை பயிர்சாகுபடி பரப்பளவை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதியின் சீதோஷ்ண நிலை, மண் வகைகள் கணக்கில் கொண்டு அந்த பகுதிக்கு ஏற்ற தோட்டக்கலை பயிர்களை பயிர் செ‌ய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். விவசாயிகளின் மொத்த சாகுபடி பரப்பளவில் 25 ‌விழு‌க்காடு தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செ‌ய்து அதிக வருவா‌ய் ஈட்டி விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை விற்பனைத் துறை அலுவலர் அந்த பகுதி விவசாயிகளுக்கு எந்த பருவத்தில் எந்த பயிர் சாகுபடி செ‌ய்வதால் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

அந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் விளைப் பொருட்களை இடைத்தரகர்களின் பிடியில் சிக்காமல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கும் உழவர் சந்தைக்கும் எடுத்து சென்று நல்ல விலைக்கு விற்க வழிவகை செ‌ய்ய வேண்டும். விதைச் சான்றுத் துறை அலுவலர் அந்த பகுதிக்கு தேவையான அனைத்து விதைகளையும் உற்பத்தி செ‌ய்ய கிராம விதைப் பண்ணைகளை அமைத்து சான்றித‌ழ் பெற்ற விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செ‌ய்ய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மண் பரிசோதனை அலுவலர் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் இருந்து மண் மற்றும் பாசனநீர் மாதிரிகளை எடுத்து மாதம் 500 மண் மாதிரிகள் வீதம் ஆண்டுக்கு 6,000 மண் மாதிரிகளை பரிசோதனை செ‌ய்து பயிருக்கு தேவையான உர பரிந்துரை செ‌ய்வும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் உழவுக்கு தேவையான டிராக்டர்களை வாடகைக்கு விடவேண்டும்.

நெல் நடவு இயந்திரம், களை எடுக்கும் இயந்திரம், உரமிடும் இயந்திரம், அறுவடை இயந்திரம், நிலம் சமன் செ‌ய்ய புல்டோசர் வாடகைக்கு விட வேண்டும். குறிப்பாக வேளாண்மை தொழிலை இயந்திரமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல வகையிலும் விவசாயிகள் வளம் பெறவும் அவர்கள் வாடிநவாதாரம் உயர்ந்திடவும் வேளாண்மைத் துறை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் பயன் அடைந்து வேளாண்மை உற்பத்தி அதிகரித்து அவர்களின் வாடிநக்கை தரம் உயர இந்த மறுசீரமைப்பு சிறப்பாக செயல்பட உள்ளது எ‌ன்று அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்