சர்வதேச அளவில் இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் நெல் உற்பத்தியில் முன்னணி நாடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் விவசாய துறை உலக நாடுகளின் உணவு உற்பத்தி எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று ஆய்வு நடத்தியுள்ளது. இதில் இருந்து அடுத்த பத்து வருடத்திற்கு பிறகு, இந்தியா நெல் உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும். அதே நேரத்தில் இந்தியாவின் நெல் உற்பத்தி சீனாவை விட குறைவாகவே இருக்கும்.
தற்போது இந்தியாவில் வருடத்திற்கு 9 கோடியே 10 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 2016 ஆம் ஆண்டில் 16 கோடியே 30 லட்சம் டன்னாக உயரும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது எதிர்காலத்தில் நெல் உற்பத்தி இந்தியாவில் தான் அதிகமாக இருக்கும்.
இந்த வருடம் சீனாவில் 12 கோடியே 32 லட்சம் டன் நெல் உற்பத்தியாகி உள்ளது. இதில் அடுத்த பத்து வருடங்களுக்கு பிறகு நெல் உற்பத்தி 48 லட்சம் டன் குறையும். அதே நேரத்தில் சீனாதான் நெல் உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும்.
இந்தியாதான் அடுத்த பத்து ஆண்டுகளில் 1 கோடி டன் நெல் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடாக இருக்கும். தாய்லாந்தில் 29 லட்சம் டன், வியட்நாமில் 25 லட்சம் டன் அதிகரிக்கும். ஆனால் சீனா. ஜப்பான் ஆகிய இரு நாடுகளிலும் உற்பத்தி குறையும்.
உலக அளவில் உற்பத்தியாகும் நெல்லில் இந்தியாவின் பங்கு 15 விழுக்காடாக இருக்கும். சீனாவின் பங்கு 18 விழுக்காடாக இருக்கும் என்று அமெரிக்க விவசாய துறை வெளியிட்டுள்ள " 2016 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் விவசாய உற்பத்தி " என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.