டிசம்பர் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மிதமான மற்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் வாயப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழை ராஜ் கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ் என்பவர் 2 நாட்களுக்கு முன்பு மழை குறித்து கணித்து தமிழ்.வெப்துனியாவிற்கு அளித்துள்ளார்.
அதில், தற்போதைய வானிலை கணிப்பின்படியும், மழை தேதியின் கணிப்பின்படியும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளது.
இதனால் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 5ம் தேதி வரை மழை பெய்யும். மேலும் டிசம்பர் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
மேலும் டிசம்பர் 13, 19, 28 ஆகிய தேதிகளில் இந்தோனேசியா, ஜப்பான் உட்பட ஒரு சில நாடுகளில் மிதமான அல்லது பலத்த நிலநடுக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு என்று கூறியுள்ளார்.