மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 120.2 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 10,221 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 9,362 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கடந்த சில நாட்களாக காவிரியின் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததாலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் அணைக்கு விநாடிக்கு சுமார் 40,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட ஏழு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் படி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
தற்போது அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால்,. காவிரி ஆற்றிலும், அதன் கிளை நதிகளிலும் வெள்ளம் அபாயம் நீங்கியுள்ளது.