11 மாவட்டங்களில் வெள்ள அபாயம்!

Webdunia

புதன், 31 அக்டோபர் 2007 (11:32 IST)
மேட்டூர் அணைக்கு அதிகளவு தண்ணீர் வருவதால், அணையில் இருந்து விநாடிக்கு 39 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் 11 மாவட்டங்களுக்கு அ‌திகா‌ரிக‌ள் வெ‌ள்ள அபாய எச்சரி‌க்கை ‌விடுத்துள்ளனர்.

கா‌வி‌ரி ‌பிடி‌ப்பு பகு‌திக‌ளி‌ல் கன மழை பெ‌ய்து வருவதா‌ல் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அ‌திக‌ரி‌த்த வ‌ண்ண‌ம் உ‌ள்ளது. இன்று காலை அணையின் நீர் மட்டம் 120.83 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 46,251 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 39,863 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால், வெள்ள தடுப்பு அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நதிக்கரைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் இரு‌க்‌கி‌‌ன்ற மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் செ‌ல்லுமாறு அதிகாரிகள் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்