பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு

Webdunia

திங்கள், 29 அக்டோபர் 2007 (12:13 IST)
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் அணையில் இருந்து ஆற்றில் விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை வளமாக வைத்திருக்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நான்கு மாதங்களாக தொடர்ந்து முழுகொள்ளளவை தொட்டது வரலாற்று சாதனை.

நேற்று முன்தினம் பவானி ஆற்றில் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது.

நேற்று மதியம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர்வரத்து வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடியாக குறைந்தது.

இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடும் அளவும் வினாடிக்கு ஐந்து ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது

வெப்துனியாவைப் படிக்கவும்