காவேரியின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்தது.
மேட்டூர் அணையி்ல் இன்று காலை நீர் மட்டம் 109.22 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி. அணைக்கு விநாடிக்கு 31,902 கனஅடி தண்ணீ்ர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 6,485 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
காவேரி பாசன பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. திருச்சியிலும், திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
பதிவான மழை விபரம்:
திருமானூர் 65 மி.மி., புல்லம்பாடி 62.4 மி.மி., லால்குடி 56 மி.மி., திருச்சி விமான நிலையம் 55 மி.மி., கல்லணை 53.6 மி.மி., திருச்சி நகரம் 47.8 மி.மி., சமயபுரம் 43.6 மி.மி., முசுறி 43.6 மி.மி., குளித்தலை 26 மி.மி.