கரும்பு விலை : காங்கிரஸ் கோரிக்கை!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (19:15 IST)
கரும்புக்கான விலையை உடனே அறிவிக்க வேண்டும் என்று மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் கன்னியாலால் கிட்வானி கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில அரசு விவசாயிகளிடம் இருந்து சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் கரும்புக்கான விலையை அறிவிக்க வேண்டும். 2007 - 2008 ஆண்டுக்கான கரும்பு பிழியும் காலம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. எனவே காலம் தாழ்த்தாமல் அரசு உடனே கரும்புக்கான விலையை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கன்னியாலால் கிட்வானி கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாயிகளிடம் இருந்து வாங்கும் கரும்பிற்கான விலையை பதினைந்து நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். கரும்புக்கான விலையை வரையறுக்கப்பட்ட நாட்களுக்குள் கொடுக்காத சர்க்கரை ஆலைகள் மீது, 1966 ஆம் ஆண்டு கரும்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலைகளும், நிதி நிறுவனங்களும் கரும்பு விலையை நிர்ணயிக்க அனுமதி அளிக்க கூடாது என்று கிட்வானி அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்