பால் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம் : ஆந்திரா

Webdunia

செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (15:06 IST)
ஆந்திரா மாநில அரசு பால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

இந்த திட்டங்கள் குறித்து முதல்வர் ராஜசேகர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது :

ஆந்திராவில் பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் அதிக அளவு பால் கறக்கும் கலப்பின மாடுகளை வாங்க 3 விழுக்காடு வட்டியில் கடன் வழங்கப்படும். இந்த வருடம் நடுத்தர மற்றும் சிறு விவசாயிகளுக்கு 32,000 கறவை மாடுகளை வாங்க கடன் வழங்கப்படும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் வருவாயை அதிகரிக்க அரசு ஒரு இலட்சம் கறவை மாடுகளை வழங்கும

மாநில அரசு 20 மாதிரி ஆட்டு சந்தையை அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கி உள்ளது. இத்துடன் 10,000 கால்நடைகளுக்கு செயற்கை கருத்தரிப்பு செய்ய விவசாயிகளுக்கு 50 சதவித மானியம் வழங்கப்படும். தற்போது செயற்கை கருத்தரிப்பு செய்ய ரூ 20 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்படும் என்று ராஜசேகர ரெட்டி தெரிவித்தார்

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை சுற்றுப்புறங்களில் தேவையான பாலின் கணிசமான அளவிற்கு தமிழ்நாட்டின் எல்லை அருகே உள்ள ஆந்திர மாநில கிராமங்களில் இருந்துதான் வருகிறது. இத்துடன் தனியார் பால் பண்ணைகளும் பாலை கொள்முதல் செய்கின்றன. கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டின் ஆவினில் இருந்து பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா மாநிலத்தில் பால் உற்பத்தி அதிகிரிக்கும் போது, கர்நாடாவிற்கு பால் ஏற்றுமதி செய்வதற்கு, தமிழகத்திற்கு போட்டியாக ஆந்திரா வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்