மீண்டும் பிரமராகிறார் மன்மோகன் சிங்

சனி, 16 மே 2009 (17:04 IST)
மத்தியில் மீண்டும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைகிறது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 260க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஏறக்குறைய ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை நெருங்கி விட்டது.

இதுவரை முடிவுகள் வெளிவந்துள்ள 380 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 199 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

பாஜக அணியோ 111 இடங்களையே பிடித்து 2ஆவது இடத்தில் உள்ளது.

மூன்றாவது அணி 40 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. முலாயம் தலைமையிலான சமாஜ்வாடி/ லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் 19 தொகுதிகளில் வென்றுள்ளன.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் 11 தொகுதிகளில் வென்றுள்ளது. அஇஅதிமுக உட்பட இதர கட்சிகள் 11 தொகுதிகளில் வென்றுள்ளன.

இன்னமும் முடிவுகள் வெளிவர வேண்டிய தொகுதிகள் எஞ்சியுள்ள நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது.

மன்மோகன் சிங்கே பிரதமராவார் என்று காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதால், அநேகமாக திங்கட்கிழமை மன்மோகன் சிங் பதவியேற்பார் என்று தெரிகிறது.

பாஜக தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்பார் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்