தொகுதிக் கண்ணோட்டம் : வேலூர்

தமிழகத்தின் வெப்பம் மிகுந்த நகரங்களில் ஒன்றான வேலூர் நகருக்கு, அங்குள்ள சரித்திரப் புகழ் வாய்ந்த கோட்டை புகழ் சேர்க்கிறது.
webdunia photoWD

கடந்த 1951ஆம் ஆண்டு வேலூர் மக்களவைத் தொகுதி ஏற்படுத்தப்பட்டது. இந்தத் தொகுதியில் பெருவாரியாக முஸ்லீம் வாக்காளர்கள் உள்ளனர். காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் இத்தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளன.

வேலூர் தொகுதியில் 1951, 1957, 1962, 1989, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1967, 1971, 1996, 2004 ஆம் ஆண்டுகளில் தி.மு.கவும், 1984 ஆம் ஆண்டில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன.

கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லீம் லீக் வேட்பாளர் காதர் மொஹிதீன் 4 லட்சத்து 36 ஆயிரத்து 642 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற சந்தானம் (அதிமுக), 2 லட்சத்து 58 ஆயிரத்து 32 வாக்குகளைப் பெற்று தோல்வியடந்தார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் முன்பிருந்த சட்டப் பேரவைத் தொகுதிகள்: காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), அணைக்கட்டு, வேலூர், ஆரணி.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் இடம்பெற்றுள்ள தொகுதிகள்: வேலூர், அணைக்கட்டு, கீழ்வைதினன்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர்.