தொகுதி எல்லை மறு சீரமைப்புக்குப் பின்னர் உருவாகியுள்ள திருவள்ளூர் தொகுதி, தனது முதலாவது மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது.
webdunia photo
WD
ஆந்திர எல்லையை ஒட்டி இத்தொகுதி அமைந்திருப்பதால் தெலுங்கு மொழி பேசுவோர் அதிகம் உள்ளனர். அதேபோல் வன்னியர்களும் தலித் மக்களும் கணிசமாக வசிக்கின்றனர். இத்தொகுதியில் தொழ்ற்சாலைகளும் தொழிலாளர்களும் அதிக அளவில் உள்ளனர்.
இத்தொகுதியின் கீழ் வரும் கும்மிடிப்பூண்டி (விஜயகுமார்), பொன்னேரி (பலராமன்) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன.
இதேபோல் திருவள்ளூர் (சிவாஜி), பூந்தமல்லி (டி. சுதர்சனம்- காங்கிரஸ்) ஆகியவை தி.மு.க. கூட்டணி வசம் இருக்கின்றன. ஆவடி, மாதவரம் ஆகியவை புதியதாக உருவாக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளாகும்.
மறு சீரமைப்புக்குப்பின் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகள்: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மாதவரம்.