பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு மகளிர் ஆணையத்தின் சார்பில் குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 தொடர்பான பட்டறை திருச்சியில் நடைபெற்றது. இதை தொடங்கிவைத்து பேசிய தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, குடும்ப வன்கொடுமைகளில் பெண்கள் பாதிக்கப்படுவதை மனித நேயத்துடன் பார்த்து தீர்வு காண வேண்டும் என்றார்.
தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். சொத்தில் சமபங்கு, உள்ளாட்சிகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, திருமண உதவி திட்டம், மகப்பேறு நிதியுதவி போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியக திகழ்வதாக அவர் கூறினார்.