கொள்கையில் மாற்றம் தேவை: ராஜா

காங்கிரஸ் கட்சி தனது கொள்கையில் மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் திட்டங்களும் மற்றும் செயல்பாடுகளும் திருப்தி அளிக்கவில்லை என்றார்.

டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ்க்கு கிடைத்த தோல்வியானது அக்கட்சியின் திட்டங்களுக்கு கிடைத்த தோல்வி என்று குறிப்பிட்ட ராஜா, பொருளாதார சீர்திருத்தங்களில் குறைந்தபட்ச செயல் திட்டங்களில் கூறப்பட்டவற்றை நடைமுறைபடுத்த மத்திய அரசு தவறி விட்டதாக கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட இடது சாரி கட்சிகள் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டு வருவதாகவும், காங்கிரஸ் கட்சி தனது கொள்கையில் மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்