ஐடிஐகளில் இலவச தொழிற்பயிற்சி
சனி, 24 ஜனவரி 2009 (15:56 IST)
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடு செல்வதற்கு வசதியாக இலவச தொழில் பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக வடெசன்னை, கோவை, கடலூர், ஈரோடு, செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திருவண்ணாமலை, சேலம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 28 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஃபிட்டர், வெல்டர் உட்பட பல்வேறு பணிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உடனடியாக விண்ணப்பிக்கவும். பதிவு செய்த நகலை சென்னை அடையாறு, 48, முத்துலட்சுமி சாலையில் உள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வைக்கவும்.
மேலும் விவரங்களுக்கு டபிள்யுடபிள்யுடபிள்யு.ஓஎம்சிஎம்எஎம்பிஓடபிள்யுஇஆர்.காம் என்ற இணையத்திலும், 044 - 24464268, 69 என்ற தொலைபேசி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.