அங்கன்வாடி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

வியாழன், 22 ஜனவரி 2009 (11:36 IST)
கா‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள அ‌ங்க‌ன்வாடி ப‌ணியாள‌ர் ம‌ற்று‌ம் உத‌வியாள‌ர் ப‌ணி‌யிட‌ங்களு‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம் எ‌ன்று அ‌ம்மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே. மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 33 அங்கன்வாடி பணியாளர், 253 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

எந்தெந்த கிராமங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற விவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், கிராம பஞ்சாயத்து அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்படும்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு கல்வி தகுதியாக புதிய கல்வி முறையில் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பழைய கல்வி முறையில் 11ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வ பெற்றவர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள். 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

உதவியாளர் பணிக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பம் வழங்கப்படும். பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்