ஊரக வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படும் 'எல்- ராம்ப்' விருதுக்கு, தகுதிவாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரூரல் இன்னோவேஷன் நெட்வொர்க் (ரின்) என்ற அமைப்பு, சென்னை ஐஐடி-யுடன் இணைந்து ஊரகக் கண்டுபிடிப்புகளுக்கான 'எல்- ராம்ப்' விருதை வழங்குகின்றன.
கண்டுபிடிப்புகளில் ஆர்வமுடைய மாணவர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிக் கொணர்ந்து, அந்த உத்தியை பாதுகாத்து நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த விருது வழங்கப்படுகிறது.
ஊரகப்பகுதி மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்புகளை வடிவமைக்கும் மாணவர்கள், 'எல்-ராம்ப்' விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருது ஒரு கோப்பையையும், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசையும் கொண்டிருக்கும்.
அடிநிலை கண்டுபிடிப்பாளர் விருது, முதலீட்டாளர் விருது என்ற இரு வகையினங்களில் 'எல்-ராம்ப்' விருது வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 5.11.2008ம் தேதிக்குள் ,'ஒருங்கிணைப்பாளர், எல்-ராம்ப் விருது- 2008, இரண்டாவது மாடி, I.C. & S.R. கட்டிடம், ஐஐடி-மெட்ராஸ், சென்னை- 36' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களை ' டபிள்யூ டபிள்யூ டபிள்யூ.எல்ராம்ப்.ஆர்க்' என்ற இணையதளத்தில் காணலாம்.