அரசு அளிக்கும் இலவச டி.டீ.பி. பயிற்சி!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:58 IST)
எஸ்.எஸ்.எல்.சி., 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, உதவித் தொகையுடன் இலவசமாக டி.டீ.பி. பயிற்சி அளிக்கவுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ள இந்த பயிற்சியில் ஐ.டி.ஐ., எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு டெஸ்க் டாப் பப்ளிஷிங் எனப்படும் டி.டீ.பி. பயிற்சி, தொழிற்சாலை மின்னணுவியல், புகைப்படக்கலை ஆகிய பிரிவுகளில் பயிற்சி தரப்படுகிறது.

இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு இயந்திரப்பட வரைவாளர் (டிராப்ட்ஸ்மென்), குளிர்ப்பதனம் மற்றும் தட்பவெப்ப நிலையை கட்டுப்படுத்துதல் (இவை இரண்டும் பெண்களுக்கு மட்டும்), உபசரிப்பு மேலாண்மை, பிளாஸ்டிக் வழிமுறைப்பணி ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய 044- 22501530 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்