தொன்மை வாய்ந்த மொழிகளில் ஒன்றாகக் கருதப்படும் சம்ஸ்கிருதத்தை இலவசமாகக் கற்றுத் தருகிறது 'சம்ஸ்கிருத பாரதி' என்ற அமைப்பு.
இம்மாதம் 10 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள மூன்று மாதப் பயிற்சி வகுப்பு தினமும் இரண்டு மணி நேரம் நடத்தப்படுகிறது. இதில் சம்ஸ்கிருதம் பேசவும், எழுதவும் கற்றுத் தரப்படுகிறது.
இந்த வகுப்பில் 13 வயது நிரம்பியவர்கள் சேரலாம். பயிற்சியின் இறுதியில் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு, 044 - 28472639 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு அறியலாம்.