க‌ணி‌னி‌த் துறை‌யி‌ல் வேலைவாய்ப்பு பயிற்சி

திங்கள், 9 ஜூன் 2008 (11:59 IST)
க‌ணி‌னி‌‌த் துறையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க "ஜீவன் ஐ.டி. அகாதெமி' என்ற பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அகாதெமியின் தலைவர் நெப்போலியன், தலைமை நிர்வாகிகள் சுரேஷ், அசோக் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகை‌யி‌ல், க‌ணி‌னி‌த் தொட‌ர்பான படிப்புகளை முடி‌த்து‌வி‌ட்டு வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு, முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் வேலை கிடைக்கும் வகையில் பயிற்சி அளிக்க "ஜீவன் ஐ.டி. அகாதெமி' என்ற தொழில்நுட்ப கல்வி பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளோம்.

மூன்று மாதம் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில் சேர 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எங்கள் அகாதெமி நடத்தும் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.

தொழில்நுட்ப ரீதியாக அவர்களைத் தயார்ப்படுத்துவதோடு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையிலும் பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. பயிற்சி பெறுபவர்களுக்கு மைக்ரோசாப்ட், கேம்பிரிட்ஜ் சான்றிதழ்களும் பெற்றுத் தரப்படும்.

பயிற்சி காலத்தின்போது எங்கள் ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் நெப்போலியன்.

வெப்துனியாவைப் படிக்கவும்