சென்னை பல்கலைக்கழக அங்கீகார கல்லூரிகளில் பட்டப்படிப்பில் அதிகளவில் மாணாக்கர்கள் சேர்ந்து படிக்க வதிசயாக 5,000ம் இடங்கள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்தியாவில் சென்னை பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவை ஒரே ஆண்டில் உருவாக்கப்பட்டன. இவற்றின் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற விழாவில் சென்னை பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.
விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ். ராமச்சந்திரன், இந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற 200 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பகுதி நேர முறை (ஷிப்ட்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 விழுக்காடு இடங்கள் அதிகரிக்கப்பட்டு 5 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.