அண்ணா பல்கலை. திறன் மேம்பாட்டு பயிற்சி

Webdunia

சனி, 7 ஜூலை 2007 (18:31 IST)
திருச்சி அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அமீக்ஸ் எஜூகேஷனல் சாஃப்ட்வேர் சர்வீசஸ் ஆகியவை இணைந்து "திருச்சி அண்ணா பல்கலைக் கழகம்-தொழில் வளர்ச்சி பல்கலைககழகம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன.

கல்லூரிகளில் தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்காக திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் 11.06.07 முதல் 30.06.07 வரை 3 வார காலம் வளாக பணியமர்த்தல், பயிற்சி முகாம் நடத்தப்பட்டன.

இந்த 3 வார காலத்தில் தொழில் நுட்பத் திறன், நேர்முக தேர்வு திறன், பேச்சுத் திறன், மொழி தொடர்பு திறன் கலந்தாய்வு நடத்தும் திறன், நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் திறன் போன்றவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இது குறித்து அண்ணா பல்கலைக் கழக(திருச்சி) துணை வேந்தர் வி.ராமச்சந்திரன் தெரிவிக்கையில், இந்த முகாமில் மாணவர்களின் தொழில் நுட்ப திறன்களை மதிப்பிட முடியும்.

நெட், ஜாவா, வெப் டெக்னாலஜி ஆகியவற்றின் அறிவை விரிவுபடுத்த முடியும். மாணவர்கள் தங்களது துறையில் அறிவை மேம்படுத்தி கொள்வதற்கும், தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பை பெறுவதற்கும் இந்த நிகழ்ச்சி பயன் உள்ளதாக அமையும் என்று வி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்