நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னணி வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் முதுநிலை மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 550
பணி: மேலாளர் - 450, முதுநிலை மேலாளர் - 100
தகுதி: மேலாளர் பணிக்கு எதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சி.ஏ.ஐ.ஐ.பி., ரிஸ்க் மேனேஜ்மென்ட(டிப்ளமோ), டிரெஸ்ஸரி மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் பேங்கிங் படிப்பு முடித்திருந்தால் சிறப்பு தகுதியாக கருதப்படும். மேலும் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
முதுகலை மேலாளர் பணிக்கு எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சி.ஏ.ஐ.ஐ.பி, சி.ஏ, எம்.பி.ஏ மற்றும் பி.ஜி.டி.பி.எம், பி.ஜி.டி.பி.ஏ போன்ற படிப்புகள் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் 5 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை இணையதள செலான் மூலம் கனரா வங்கியில் கட்டணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100 செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2013
மேலும் முழுமையான தகவல்கள் அறிய www.canarabank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.