12-ல் திறந்தநிலை பல்கலை. பி.எட். நுழைவுத்தேர்வு!

சனி, 4 அக்டோபர் 2008 (11:08 IST)
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தனது பி.எட். ஆங்கில வழி பாடத்திற்கான நுழைவுத் தேர்வை வரும் 12 ஆம் தேதி நடத்துகிறது.

இதுகுறித்து இப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு.செ.பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அக்டோபர் 12 ஆம் தேதி பகல் 11 மணியில் இருந்து 1 மணி வரை நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.

இத்தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைத்தல் முறை பின்பற்றப்படும். நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தக்க ஆதாரங்களுடன், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேர்வு அனுமதி நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் ஸ்டெல்லா மேட்டிடியூனா கல்லூரி (சென்னை), டாக்டர் என்.ஜி.பி. கலை,அறிவியல் கல்லூரி (கோவை), வைசியா கல்லூரி (சேலம்), புனித இக்னேஸியஸ் கல்வியியல் கல்லூரி (நெல்லை), உருமு தனலட்சுமி கல்லூரி (திருச்சி), முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி (வேலூர்) ஆகிய ஒடங்களை அணுகி வரும் 11-ம் தேதி நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று துணைவேந்தர் பழனிச்சாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்