இந்தியாவில் 7,000 அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் : அமைச்சர் தகவல்!
புதன், 22 அக்டோபர் 2008 (17:51 IST)
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மொத்தம் 6,999 உள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்கலைக் கழக மானியக்குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் 4,961 தனியார் கல்லூரிகளும், 2,038 அரசு கல்லூரிகளும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டிலேயே அதிக அளவாக இதுபோன்ற அங்கீரிக்கப்பட்ட கல்லூரிகள் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 980 கல்லூரிகள் உள்ளன. இதையடுத்து மகாராஷ்டிராவில் 917, கர்நாடகாவில் 591, ஆந்திரப் பிரதேசத்தில் 450, மத்தியப் பிரதேசத்தில் 445 கல்லூரிகளும் உள்ளன.
இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை தகுதியுடைய 3,904 தனியார் கல்லூரிகள் பல்கலைக் கழக மானியக் குழுவின் அனுமதி பெற்றுள்ளன