தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக நடப்புக் கல்வியாண்டில் மேலும் 20 ஜவஹர் நவோதய வித்யாலயம் (ஜேஎன்வி) பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லியில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டதாக, மத்திய அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதன்படி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 10 பள்ளிகளை அமைப்பதற்கு ரூ.431.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 1985- 86 ஆம் ஆண்டில் ஜவஹர் நவோதய வித்யாலயம் திட்டத்தின் கீழ் 2 பள்ளிகள் தொடங்கப்பட்டு, தற்போது நாடு முழுவதும் 554 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இவை உறைவிடப்பள்ளிகளாக இயங்கி வருகின்றன. இவற்றுக்கான செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.