பாடத்திட்டத்தில் சீர்த்திருத்தம்: பிரதமர் யோசனை!

வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (12:11 IST)
கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் பாடத் திட்டங்களில் உரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் யோசனை தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், வியாழக்கிழமை அன்று பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.

அப்போது ஆசிரியர்கள் மத்தியில் பேசிய பிரதமர், தற்போதுள்ள பாடத் திட்டம், தேர்வு முறை போன்றவற்றில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மத்திய அரசின் நடவடிக்கையால் பள்ளிப் படிப்பை நிறுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், படிப்பை தொடராதோர் எண்ணிக்கையை முழுவதும் நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

எஸ்.எஸ்.ஏ. எனப்படும் 'அனைவருக்கும் கல்வி' திட்டத்தைப் போல பள்ளிப் படிப்பை நிறுத்துவோரை தடுக்க 'ராஷ்ட்ரீய மத்தியமிக் சிக்ஷா அபியான்' (ஆர்.எம்.எஸ்.ஏ.) என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்திருப்பதாக, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்