நாளை காவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (12:30 IST)
த‌மிழக‌மமுழுவது‌மநாளை 2ஆ‌ம் நிலைக் காவலர் ப‌ணி‌க்காஎழு‌த்து‌ததே‌ர்வப‌ல்வேறமைய‌ங்க‌ளி‌லநடைபெஉ‌ள்ளது. செ‌ன்னை‌யி‌‌ல் இ‌த்தே‌ர்வு 9 மைய‌ங்க‌ளி‌ல் நடைபெற உ‌ள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (சென்னை தேர்வு மையத்தின்) தலைவர் வெளியிட்டுள்ள அ‌றி‌வி‌ப்‌பி‌ல், " 2007ஆ‌ம் ஆண்டு தமிழ்நாடு காவ‌ல் துறையில் 5,959 2ஆ‌ம் நிலைக் காவலர் (ஆண், பெண்) பதவிக்கு சென்னையில் இருந்து விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு நாளை (3ஆ‌ம் தே‌தி) காலை 10 மணிக்கு சில தேர்வு மையங்களில் முதல் கட்டமாக எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்கு 8,799 பேருக்கு தபாலில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்தப் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள், நாளை காலை 9 மணிக்கு, அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். தேர்வுக்கு வருவதற்கு முன்பாக அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் படித்து தெரிந்து கொண்டு வர வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பதாரர், தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சென்னையில் அண்ணாநகர் மேற்கில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி, லயோலா கல்லூரி, நல்ல மேய்ப்பர் நல்லாயன் மேல்நிலைப் பள்ளி (நுங்கம்பாக்கம்), மாநில கல்லூரி, எத்திராஜ் பெண்கள் கல்லூரி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி (அண்ணாசாலை), மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (நுங்கம்பாக்கம்), மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (நுங்கம்பாக்கம்) ஆகிய 9 இடங்களில் தேர்வு நடக்கிறது.

தபால் மூலம் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை திருமண மண்டபத்துக்கு நாளை வந்து, காலை 7 மணி வரை அங்கு‌ள்ள அலுவலரை அணுகி நகல் அழைப்பை பெற்றுக் கொள்ளலாம். வரும் போது பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், கருப்பு அல்லது நீலநிற ப‌ந்துமுனை பேனா, தேர்வு எழுதுவதற்கான அட்டை ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும்" எ‌ன்று கூறப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்