தொலை‌நிலை‌க் க‌ல்‌வி‌யி‌ல் சைபர் சட்டப் படிப்பு

சனி, 14 ஜூன் 2008 (11:42 IST)
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முதுநிலை டிப்ளமோ சைபர் சட்டம் எ‌ன்ற பாட‌த்‌தி‌ட்ட‌த்தை இ‌ந்த ஆ‌ண்டு முத‌ல் தொடங்குகிறது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன் (இக்னோ) இணைந்து இப்படிப்பு தொலைநிலைக் கல்வியாக நடத்தப்படும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் சச்சிதானந்தம் தெரிவித்தார்.

மெ‌ன்பொரு‌ள் துறை சா‌ர்‌ந்தவ‌ர்க‌ள், சட்ட மாணவர்கள், க‌ணி‌னி சார்ந்த வணிகவியல் துறையை சா‌ர்‌ந்தவ‌ர்க‌ள், பொறியாளர்கள், ‌நிறுவன செயலர்கள், பட்டயக் கணக்கர்கள் ஆகிய துறை‌யி‌ல் ப‌ணியா‌ற்றுபவ‌ர்களு‌க்கு உதவும் வகையில் இ‌ந்த பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இ‌ந்த முது‌நிலை டி‌ப்ளமோ பாட‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் சேர எந்தப் பட்டப் படிப்பு படித்தவர்களு‌க்கு‌ம் தகு‌தி உ‌ள்ளது.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், வழக்கறிஞர் அ‌ல்லாத, சட்டம் குறித்த அறிவைப் பெற விரும்புவோருக்கென தற்போது பி.ஏ.எல். என்ற பாட‌ப்‌பி‌ரிவை நட‌த்‌தி வரு‌கிறது.

இப்படிப்பு ந‌வீன‌ப்படு‌த்த‌ப்ப‌‌ட்டு, பி.எல். (அகாடமிக்) என்று மா‌ற்ற‌த்துட‌ன் நட‌த்த ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்‌டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்