தொழிற்பயிற்சி நிலையங்களில் கைவினைஞர் பயிற்சி

Webdunia

சனி, 11 ஆகஸ்ட் 2007 (11:14 IST)
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கைவினைஞர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்டு 2007-ம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. சில அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இருக்கைகள் காலியாக உள்ளன. இதில் சேர தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கான விவரங்களை அருகில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் வரும் 22-ந் தேதி ஆகும்.

தகுதியுள்ள மாணவ, மாணவியர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சிறப்பு ஆணையர் மற்றும் ஆணையர் ப.சிவகாமி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்