ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு துவங்கியது

Webdunia

செவ்வாய், 3 ஜூலை 2007 (11:34 IST)
இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்களுக்கான கலந்தாய்வசென்னையில் நேற்று தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள 636 பயிற்சி பள்ளிகளில், 43,980 இடங்கள் உள்ளன. அவற்றில் 23,402 இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான கலந்தாய்வு நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் அலுவலகத்தில் தொடங்கியது.

கலந்தாய்வை பள்ளி கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம் தொடங்கிவைத்தார்.

கலந்தாய்வு வரும் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 9-ந் தேதி முதல் 4 மையங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு டி.பி.ஐ. வளாகத்திலும், அறிவியல் பிரிவு மாணவிகளுக்கு திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. கல்லூரி வளாகத்திலும், கலைப்பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு திருவல்லிக்கேணியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திலும் நடைபெறுகிறது.

தொழிற் பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள ஸ்டெல்லா மாட்டிடுனா பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்