புற்றுநோய் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது- ஆய்வு

செவ்வாய், 18 மார்ச் 2014 (15:27 IST)
தற்போதைய சுடான் பகுதியில் 3000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு இளைஞனின் எலும்புக் கூட்டில் புற்றுநோய்க்கான சான்றுகளை கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டனின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
FILE

உலகில் மிக பழமையான புற்றுநோய் பாதிப்பு என்று இதுவரை நம்பப்படும் சம்பவத்தை விட இது 2000 ஆண்டுகள் பழமையானதாகும்.

இந்த எலும்புகளில் துளைகள் இருந்தன, அவை ஒரு வகையான புற்றுநோய்க்கான சான்று என்றும் மிகெலா பிண்டர் என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளார்.

‘பிலொஸ் ஒன்’ என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு புற்றுநோய் என்பது முற்றிலும் ஒரு நவீன கால நோய் அல்ல என்று தெரிவிக்கின்றது.
 
FILE

மேலும் ஆயிரக்கணக்கான வருடங்களாக எவ்வாறு இந்த நோய் பரிணமித்திருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்காணிக்கவும் இந்த ஆய்வு உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்