வெள்ளை வெங்காயம், குடல் பாக்டீரியா பன்முகத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இது ஒரு ப்ரிபயாடிக்காக செயல்படுகிறது. மேலும் நம் வயிற்றுக்கு நல்லது செய்யும் ஸ்டார்ச் தன்மை இதில் உள்ளது. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.
செரிமான கோளாறு மற்றும் நச்சுத்தன்மை மற்றும் வீக்கம் உள்ளிட்ட பல சுகாதார பிரச்சனைகளைத் தடுக்கிறது. வெள்ளை வெங்காயத்தில் உள்ள செலினியம், நோய் எதிர்ப்பு சக்தியை நிர்வகிக்க கூடிய சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
எப்போதும் உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வருவது இரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சனையில் இருந்து காக்கிறது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி, அடிக்கடி மயக்கம் வருவது, தொடர் உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.