காளான் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன...?

காளானில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடைக்கின்றன. கோதுமையுடன் ஒப்பிடும்போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன.
இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த  அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
 
இதயத்தை பாதிகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது.
 
மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காலான் சூப் அருந்தி வந்தால்  விரைவில் உடல் தேறும்.
 
காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை  நீக்குகிறது.
 
குறிப்பு: காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்