சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த மருந்து பொருளாகவும் குப்பைமேனி உள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், சீராக வைத்துக் கொள்ளவும் குப்பைமேனி பயன்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் குப்பைமேனியை ஜூஸாகவோ அல்லது வேறு ஏதேனும் பிடித்தமான முறையில் அவ்வப்போது உட்கொள்வது நல்லது.
தேவையில்லாத முடி வளரும் பகுதிகளில் மஞ்சள் பொடியுடன் சேர்த்து குப்பைமேனியை அரைத்து தடவுவதன் மூலம் அந்த முடிகளை நிரந்தரமாக அகற்றலாம். குப்பைமேனியில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது எப்போதும் இளமையான தோற்றத்தில் வைத்துக் கொள்ள உதவுகிறது. சளி மற்றும் இருமல் தொல்லையை போக்க குப்பைமேனி உதவுகிறது. எனவே சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குப்பைமேனியை கசாயமாக உட்கொள்வது நல்ல பயனை அளிக்கும்.
தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி, புண், காயம், ஊறல், சிரங்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக குப்பைமேனி உள்ளது. பாதிக்கப்பட்ட இடத்தின் மேல் குப்பைமேனி இலைகளை நசுக்கி தடவுவதால் தோல் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.