திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.
திராட்சை பழம் அனைத்து கால நிலைகளிலும் கிடைக்க கூடிய ஒரு வகை பழமாகும். இதன் சுவை இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையை கொண்டுள்ளது. திராட்சை பழம் மலச்சிக்கல், வயிற்று வலி, எரிச்சல் கொண்ட குடல் நோய், வாய்வு மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.