மூட்டுகளில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு போன்றவை தான் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது. இதனை கரைத்து சிறுநீரக வெளியேற்றினால் மூட்டுகளில் வலி குறையும். மூட்டுகளில் வலியை குறைக்க முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
முடக்கத்தான் இலையை நிழலில் காய வைத்து பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரிலோ அல்லது தேனிலோ அரை டீஸ்பூன் இதை கலந்து குழைத்து, தொடர்ந்து ஒரு மண்டலம் அளவு இதை சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் வலி குறையும்.
முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் வலியை நிரந்தரமாக குறைக்கலாம். மூட்டு வலி, எலும்பு தேய்மானம் இருப்பவர்கள் வாரத்துக்கு மூன்று முறை முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து கொண்டால் மூட்டுவலி படிப்படியாக குறையும்.