சர்வாங்காசனம் செய்யும் முறையும் அதன் பயன்களும்...!!

உடலெங்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, இளமையை நிலை நிறுத்தி, நோய்களை ஒதுக்கி உடலினை பாதுகாப்பதால் இதற்கு  சர்வாங்காசனம் என பெயர் பெற்றது.
சர்வாங்காசனம் செய்முறை: தரைவிரிப்பில் மல்லாந்து படுத்து சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு பின்புறத்தை இரு உள்ளங்கைகளால் தாங்கி மேலே தூக்கி உயரே கொண்டு வரவும்.
 
கால்கள் இரண்டையும் வானோக்கி நீட்டி, முழங்கைகள் தரைவிரிப்பில் அழுத்தியிருக்க இரு உள்ளங்கைகளாலும் முதுகைத் தாங்கிக் கொள்ளவும். தலையும், புஜங்களும் தரைவிரிப்பில் இருக்க முதுகு, இடுப்பு, தொடை கால்கள் வானோக்கி இருக்க வேண்டும்.
 
பார்வைக்கு தோள் மேல் நீண்டிருக்க வேண்டும், சுவாசம் சமமாக இருக்க வேண்டும். இதுவே சர்வாங்காசனம். ஓரிரு நிமிடங்கள் நின்ற பிறகு கால்களை மடித்து, முதுகு, பின்புறத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்து மெதுவாக கால்களை நீட்டி ஆரம்ப நிலைக்கு வந்து பின எழுந்து  அமர வேண்டும். சர்வாங்காசனம் செய்யும்போது உமிழ்நீரை விழுங்கக் கூடாது.
 
பலன்கள்: 
 
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இளமையை காக்கும். உடல் வளர்ச்சி காணும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும். நரம்புகள் புத்துணர்ச்சி பெரும் சோம்பலை போக்கும். உடல் சதை போடாமல் தடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்