பசலைக்கீரையில் மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் இருக்கின்றன. அதோடு பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து மற்றும் உப்பின் காரச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன.
பாலக் கீரை ரத்த சிவப்பு அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால் இது அனிமியா நோய் வராமல் தடுக்க உதவுகிறது. பாகல் கீரையுடன் வேப்பிலை ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.
பித்தம், நீர்த்தாரை, வெட்டை நோய்கள், மேகநோய் போன்ற தோல் நோய்களைக் குறைக்கும் வேலையை இந்த பசலைக்கீரை செய்கிறது.