வெயில் காலத்தில் ஏற்படும் கட்டிகளை போக்க சில மருத்துவ குறிப்புகள் !!
திங்கள், 23 மே 2022 (13:49 IST)
வெயில் காலம் வந்துவிட்டால் உடல் சூடு தாங்காமல் சிலருக்கு கட்டிகள் உருவாகிவிடும். இது கொப்பளங்கள் போல் வீங்கி வலியை ஏற்படுத்தும்.
குளுமை என்றாலே அது இளநீர் தான். இது உடல் சூட்டை தணித்து குளுர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் உடலில் நீர்ச்சத்து நன்றாக இருந்தால் உடல் சூடு ஏற்படாது. மேலும் தேவையான தண்ணீர் பருக வேண்டும்.
மஞ்சளை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கட்டி இருக்கும் இடத்தில் பூசவேண்டும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு இவ்வாறு செய்ய வேண்டும். மேலும் எலுமிச்சை உடல் சூட்டை தணிக்க உதவும் சிறந்த பழம் ஆகும்.
வேப்பிலையை நன்றாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூளை கலந்து கட்டி இருக்கும் இடத்தில் பூசவேண்டும். இவ்வாறு செய்துவந்தால் சில நாட்களிலேயே கட்டிகளின் வீக்கம் குறைந்து விடும்.
90% தண்ணீர் நிறைந்த பழம் என்பதால் உடல் நீர்ச்சத்து வற்றுவதை தடுத்து குளுர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. உடல் வெப்பத்தால் ஏற்படும் தொண்டை வறட்சிக்கு வெள்ளரி நல்லது.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கால் பாதங்கள், நகங்களின் மேற்பரப்புகளில் விளக்கெண்ணெய் தடவலாம். இது உடலுக்கு குளிர்ச்சி தரும்.