சேம்பில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இதை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.
ஏராளமான நார்ச்சத்து இருப்பதால்,. இது செரிமானத்தை சரியாக வைக்கும். இதனுடன் வாயு பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவையும் நீங்கும்.
சேப்பங்கிழங்கு சாப்பிடுவது கண்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி,ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இவை கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
சேப்பங்கிழங்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் சி, ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோய்கள், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.