சிவப்பு அரிசியானது சாதாரண அரிசியினைவிட விலை அதிகமானதாக உள்ளது. இதற்கு காரணம் இதில் உள்ள சத்துகளே. இதில் புட்டு, சாதம், கஞ்சி, களி எனப் பலரும் பல வகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிடுவதுண்டு.
சாதாரண வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது, அதனால்தான் அதனை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது என்று கூறப்படுகின்றது. ஆனால் இதுவே சிவப்பு அரிசியினை எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவானது கட்டுக்குள் வரும்.
சிவப்பு அரிசி கல்லீரல் இயக்கத்தினைச் சரிசெய்யும் தன்மை கொண்டதாக உள்ளது. சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.