வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது. இருந்தாலும் செவ்வாழை பழத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், சிறுநீரக கல் வராமல் இருக்க ஆசைப்படுபவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவதினால், செவ்வாழையில் உள்ள உயர்தர பொட்டாசியம் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கும்.
நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஏற்பட்டால் உடலில் பலம் குறையும், இதனால் ஆண்மை குறைப்பாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை இரவு தூங்கும் போது சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, நரம்புகள் பலம் பெரும். ஆண்மை குறைவு பிரச்சனை சரியாகும்.