அன்னாசிபழத்தில் புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் அதிக அளவில் நிறைந்துள்ளது. வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.