பீர்க்கங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காய வைத்து, இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு, அதை சாதம் வடித்த கஞ்சியோடு கலந்து, குழைத்து தலைமுடிக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து வந்தால் இளநரை நீங்கும். தலைமுடியும் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.
பீர்க்கங்காய் இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும். இதே போல், பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் வைத்தால், காயம் சீக்கிரம் ஆறும். பீர்க்கை நார் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, ஆரோக்கியமாக வைக்க கூடியது.