உடலுக்கு ஆரோக்கிய குணநலங்களை அள்ளித்தரும் ஆனியன் !!

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:59 IST)
வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலும்  அல்லது உணவில் சேர்த்து சாப்பிட்டாலும் மிக ஆரோக்கிய குணநலங்களை நம் உடலுக்கு தந்து நன்மை அளிக்கிறது.


வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-செப்டிக் இருப்பதால் நம் உடலில் நச்சுத்தன்மை உடைய மைகோ பாக்டரியவை செயலிழக்க செய்து மீண்டும் வராமல் தடுக்கின்றது.

ரத்த சோகை உள்ளவர்களுக்கு அதனை சரிசெய்ய தினம் ஒரு வெங்காயம் என உட்கொண்டு வந்தால் விரைவில் குணப்படுத்தலாம். இதில் அதிகமான இரும்புச்சத்து இருப்பதால் இதை அப்படியே சாப்பிடும் போது நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கின்றது.

குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் தாய்ப்பால் சுரக்க வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து கொண்டால் அல்லது பச்சையாக சாப்பிட்டால் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்த்து உட்கொண்டு வந்தால் ஜலதோஷம் பெருமளவு வராமல் பாதுகாக்கிறது.  வெங்காயத்தில் இருக்கும் வேதிப்பொருட்கள்  நம் உடலின் கெட்ட கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.

வெங்காயத்தில் எளிதில் கரையக்கூடிய சத்துக்கள் இருப்பதினால் குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகமாக வளர்ச்சி அடைய செய்கின்றது. மேலும் இதில் வாரம் ஒரு முறை என வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து கொண்டால் முடி வளர உதவுகிறது மேலும் உடல் வெப்பம் இன்றி குளிர்ச்சியாக வைத்திருக்க பெரிதும் உதவி புரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்